Search This Blog

Thursday, August 23, 2007

கவிதை

உலக சுகாதார தினம்

ப. குமார்



நேற்று ஈழம்
இன்று ஈராக்
குவியல் குவியலாய்ப் பிணங்கள்
மறுபக்கம் மருத்துவமனையில்
உறைந்த குருதிகளுடன்
கை கால் இழந்த குழந்தைகள்
இவை போலியோவால் அல்ல!
போரினால்.

சுதந்திரம்
என் பேச்சிற்கும் இல்லை
என் மூச்சிற்கும் இல்லை-இன்று
சல்லடை போட்டுச் சுவாசிக்கிறேன்
சார்ஸ் நோயாம்.

குப்பைத் தொட்டியில் வீசிய
உணவுப் பொட்டலத்திற்க்கு
உருண்டு புரண்டான் ஒருவன் நாயோடு!-அந்த
உணவை உண்ணும் போது நினைத்தான்-இன்று
உலக சுகாதார தினமென்று.

குண்டுகளின்
சத்தங்கள்
எங்கள் காதுகளைச் செவிடாக்கின.
புகைகள்
எங்கள் சுவாசத்தை வீணடித்தன.
அதன் சிதறல்கள்
எங்கள் கண்களைக் குருடாக்கின.
இவைகளின் ஒட்டுமொத்த
அவலங்களுக்குப் பதில்தான் என்ன?

ஓ! இன்று உலக சுகாதார தினமல்லவா?

நேற்று ஈழம்
இன்று ஈராக்
நாளை ?

ப. குமார், ஆய்வாளர், தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
kumsu_in@yahoo.com

திண்ணையில் ப. குமார் (Friday August 22, 2003)

1 comment:

நளாயினி said...

குப்பைத் தொட்டியில் வீசிய
உணவுப் பொட்டலத்திற்க்கு
உருண்டு புரண்டான் ஒருவன் நாயோடு!-அந்த
உணவை உண்ணும் போது நினைத்தான்-இன்று
உலக சுகாதார தினமென்று.

மனதை கனக்க வைத்த வரிகள்.