Search This Blog

Thursday, August 30, 2007

காலந்தோறும் தமிழ் நூல்கள்

தமிழ் மொழிக்கு அணிசெய்திட சங்க காலம், சங்கம் மருவிய காலம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக் காலம் என இலக்கியங்கள் காலம் தோறும் தோன்றியுள்ளன. சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களைக் குறித்து "நற்றிணை நல்ல
குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்தபதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தேர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்றுஇத்திறந்த எட்டுத் தொகை" -எனப்பாடல் ஒன்று கூறுகிறது.

சங்க காலத்தில் தோன்றிய நூல்கள்

கி.பி.இரண்டாம் நூற்றாண்டு

கி.பி.நான்காம் நூற்றாண்டு

கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

ஆறாம் நூற்றாண்டு

ஏழாம் நூற்றாண்டு

எட்டாம் நூற்றாண்டு

ஒன்பதாம் நூற்றாண்டு

பத்தாம் நூற்றாண்டு

பதினோரம் நூற்றாண்டு

பனிரெண்டாம் நூற்றாண்டு

பதின்மூன்றாம் நூற்றாண்டு

பதினான்காம் நூற்றாண்டு

பதினைந்தாம் நூற்றாண்டு

பதினாறாம் நூற்றாண்டு

பதினேலாம் நூற்றாண்டு

பதினெட்டாம் நூற்றாண்டு

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு

குறிப்பு: காலந்தோறும் தோன்றிய தமிழ் நூல்கள் பற்றிய விவரங்களைக் கணினித்தமிழ் சாப்ட்வேர் நிறுவனத்தார் தொகுத்துள்ளார்கள், இது தமிழாய்வு புரிந்துவரும் இளம் ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில் இதை இங்கு கொடுத்துள்ளேன்.... நூற்றாண்டுவாரியாகத் தோன்றிய நூல்களைத் தேடுவோர் மேற்கண்ட இடங்களில் சுட்டியைச் சொடுக்கவும்.

நன்றி: http://kaniyatamil.com

தமிழின் வரலாறு

தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும்.
மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும். ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே தமிழினத்தின் சிறப்பு. இது
குறித்து அறிய இதன் வரலாற்றை நான்கெனப் பகுத்து அதன் தோற்றத்தையும், தனித்துவத்தையும் விரிவாகப் பார்ப்போம். அவையாவன..

மொழி வரலாறு
இலக்கிய வரலாறு
இன வரலாறு
தமிழ் எழுத்து வரலாறு
மொழியின் தோற்றம்

ஒரு அமைப்போ, சமுதாயமோ தன் கருத்துக்களை பரிமாறிடவும், ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அவசியம் தேவை மொழி. தமிழர்கள் பேசிய மொழி எக்காலத்தைச் சேர்ந்தது, என்கிற வினாவுக்கு அறிஞருலகம் தெளிவாகவே விடை தருகிறது.

அகழ்வு ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம் வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள், அங்கு கண்ட சீரற்ற கருவிகளால் கற்காலம் அதாவது கல்வி அறிவு, சிந்திக்கும் திறனற்ற வளர்ச்சியுறா காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரித்து வழங்கிடுவர்.

சிந்தனை வளர்ச்சியே நாகரிக காலத்தின் தொடக்கம், அத்துடன் வேட்டை கருவிகளை சீராக செப்பனிட்டுப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஏற்பட்டதுதான் மொழித் தோற்றத்தின் காலமாகும்.

இவ்வாறான மொழியின் தோற்றம் ஏற்பட பல்வேறு கட்டங்களை புதிய கற்காலம் கொண்டிருந்தது. ஒலிகளைக் கூர்மையாக அறிந்து, புரிந்து கொள்வது தொடக்கமாகும். பின்னர் புள்ளினங்கள், விலங்குகளின் ஓசை போன்றே தாமும் ஒலி எழுப்ப முயன்று ஒலியை வெளிப்படுத்தியது ஒரு கட்டம். இதனைக் கேட்பொலிக் காலம் என்பர்.

செவியால் கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட ஒலிகளை நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும் அவற்றை கண்ட போதும், கேட்ட போதும் சக மனிதருக்கு சுட்டிக் காட்டும் அல்லது அந்த உணர்வைப் பகிர்ந்து கொள்ளும், பரிமாறிக் கொள்ளும் காலமே சுட்டொலிக் காலம் எனலாம்.
கேட்பொலியின் செழுமையும் சுட்டொலியின் பயனும் இணைந்த போது அழுத்தமான சைகைகள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் தோன்றியிருக்கலாம்.

கேட்பொலி, சுட்டொலி, சைகைகளுக்கு பின் ஒரே விதமான ஓசை நயம் அச் சமூகத்தில் பகிர்ந்திடும் போது ஓசைகள் ஒரு வடிவாகி ஒரு மொழியாய் தோன்றியது. தமிழும் இவ்வாறு தான் தோன்றியதாக மொழியியல் ஆய்வில் தன்னையே ஒப்படைத்த தேவநேயப் பாவாணர் அவர்கள் கருத்துரைக்கிறார்.

இலக்கிய தோற்றம்

மனித மனங்களில் தோன்றும் கருத்துக்களின் பரிமாற்ற சாதனமே இலக்கிய பதிவுகள். இலக்கியம் என்பது எல்லோரும் அறியத்தக்க, அறியவேண்டிய ஒரு உண்மை போன்றதொரு கருத்து. அந்த கருத்தைச் சொல்பவரின் மேதைத் தன்மை, மேதைமையுடன் இணைந்த கற்பனை, கற்பனையை உருவகமாக்கும் ஒன்றைப் பற்றிய முழுமையான சேதி அறியும் ஆர்வம். இவைகளெல்லாம் ஒருங்கே சேர்ந்தால் தான் இலக்கியம் உருவாகும்.

இது போன்ற தன்மை கொண்ட ஏராளமான இலக்கியங்கள் வேறெந்த இயற்கை மொழியிலும் இந்தளவுக்குப் படைக்கப்படவில்லை. தமிழில்தான் உண்டு.

சங்க காலத்திற்கு முன்பே இலக்கியம் என்பது இருந்துள்ளது. அக்காலப்புலவோர் புனைந்த பல பாடல்கள் வாய் மொழியாக, வழிவழியாகக் கூறி இரசிக்கும் பண்பு மிகுந்திருந்தது. பின்னர் வாய்மொழி இலக்கிய காலத்தின் சீரிய மேம்பாடாக உருவானது பதிவு செய்து பாதுகாக்கும் ஏட்டிலக்கிய காலமாகும்.

ஏட்டிலக்கிய காலம் தொடங்கி பலநூறு ஆண்டிற்குப் பின் அறிவியல் மேம்பாட்டால் ஒரு சுவடி இலக்கியம் ஆயிரக்கணக்கான நூல் பிரதியாக மாறியது. இது இலக்கியப் பதிவு காலமாகும்.

இவ்வாறான இலக்கியப் பதிவின் போதுதான் மூல ஏட்டுச் சுவடிகள் பலவும் பதிப்பிக்கப்பட்டதுடன் மூல இலக்கியங்களுக்கு விளக்கவுரை, பதிப்புரை, பதவுரை என இலக்கியத் தளம் வாசிப்பிற்கு எளிதானது. தமிழின் சங்க இலக்கியம் அனைத்தும் செய்யுள் வடிவங்கள். இச் செய்யுள் வடிவ இலக்கியங்களுக்கு குறுகிய அடிகளைக் கொண்ட தனிப்பாடல்கள், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்கள், தொடர் நிலைச் செய்யுளாக வரும் காப்பியங்கள் எனப்பல வகையுள்ளது.

இச்செய்யுள்களை படைக்கும் புலவர்கள் அதற்கென வகுக்கப்பட்டுள்ள இலக்கண நெறிகளைக் கையாண்டுள்ளனர். அந்த இலக்கண நெறிகள் இன்றும் கையாளப்பட்டு மரபு செய்யுள்களில் பாடல்கள் புனைகின்றனர்.
விருந்தே தானும்புதுவது கிளந்த யாப்பின் மேற்றே என தொல்காப்பியர் யாப்பு எனும் செய்யுள் படைப்புக்கு நெறிவகுக்கிறார். இதனால் எத்துறையாயினும் தமிழ் மொழியை அத்துறைக்கு ஏற்றவாறு பயன்படுத்திட இயல்கிறது.

இனத் தோற்றம்

மொழிதான் ஒரு இனத்தின் மூலம் மொழியைப் பயன்படுத்தும் இனக் குழுக்களை வகைப்படுத்தும் போது அம்மொழி பேசும் கூட்டம், சமூகம், நாட்டவர்கள் என்கிற பல உள்ளார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனம் அடையாளம் காணப்படுகிறது.இனங்கள் பேசும் மொழி இரு வகைப்படும் ஒன்று இயற்கை மொழி பிரிதொன்று உருவான மொழி.இயற்கை மொழி பலவும் மனித இனத்தொடக்க காலத்திலிருந்து மக்கள் பயன்பாட்டில் இருப்பது.உருவான மொழி பல இனத்திலிருந்து பிரிந்தவர்கள் கூடி தமக்குள் ஒரு பரிமாற்ற சாதனமாகப் பயன்படுத்தும் பொருட்டு உருவாக்கிக் கொள்ளும் மொழி. காட்டாக ஆங்கிலத்தைக் குறிப்பிடலாம்.

தமிழர் தமிழைத் தங்கள் மொழியாகக் கொண்டதால் தமிழினம் என சுட்டப்படுகிற்து. இயற்கை மொழிக் குடும்பத்தில் தமிழ் பழமையானது. அதன் பழமையின் கால அளவைத் தெளிவாக வரையறை செய்ய இயலாத அளவுக்கு பல்லாயிரம் ஆண்டுகால மனித நாகரீக காலத்தின் வரையரைகளான பழங்கற்காலம், புதிய கற்காலம் என்பவற்றோடு தொடர்புடையது.

மானுடவியல் ஆய்வாளர்கள் உலகளவிலான மானுட சமூகத்தை நான்கு பிரிவாக பிரித்து அறிவித்துள்ளனர். 1.திராவிட இனம் 2.ஆப்பிரிக்க இனம் 3.மங்கோலிய இனம் 4.ஐரோப்பிய இனம். மேற்காணும் இந்த நிலஅளவிலான இனக்குழுக்களின்அடையாளம் உடல் அமைப்பு, தலைமயிரின் வடிவம், தோலின் நிறம், முக அமைப்பு என்கிற பன்முகத் தன்மையான ஆய்வில் மூலமாக விளங்கும். இந்த நான்கு இனப்பிரிவுகளில் தனித்த, ஒன்றுடன் ஒன்று கலந்த மனித இனங்களே இன்று உலகெங்கும் உள்ளனர். அந்த வகையில் க்வார்ட்ஸ் எனப்படும் இயற்கையாக நிலத்தில் உருவாகும் தனிமமான படிகக் கற்களை பழங்கால திராவிட இனம் பயன்படுத்தத் தொடங்கியது. நிலத்தில் விளையும் இந்த படிகக் கற்கள் உறுதியாகவும், கூர்மையாகவும் விளங்கத்தக்கது. இதனைப் பயன்படுத்திய காலமே பழங்கற் காலம். உலகில் அதே சமயம் பிற இனமக்களும் ஆங்காங்கு நிலத்தில் கிடைத்திட்ட கூர்மையான கூழாங்கற்கள், பாறைக் கற்களை வேட்டைக்குப் பயன்படுத்தினர். தொடக்க கால மனிதன் கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தி, பின்னர் பிரிதொரு கற்களால் ஏனைய ஆயுத கற்களைத் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்தனர். இக்காலத்தை வரலாற்றாய்வாளர்கள் "லெவ்ல்லோசியன்" என்பர். வேட்டைக் கருவிகளை க்வார்ட்ஸ் கற்களில் தயாரிக்கத் தொடங்கிய திராவிட இனம் காலப்போக்கில் இதர பயன்பாட்டுக் கருவிகளையும் செய்யும் ஆற்றல் பெற்றது. திராவிடர்களின் நுண்ணறிவுத் திறன் வளர வளர கருவிகள் மட்டும் சீராகவில்லை, அவர்கள் உச்சரிக்கும் மொழிகளும் சீராகத் தொடங்கியது.

இவ்வாறுதான் திராவிட இனக் குழுக்களில் மூத்த மொழியான தமிழ் பேசப்பட்டு பெரியதொரு மனித இனத்தின் பயன்பாட்டில் விளங்கியது. காலப்போக்கில் திணை நிலங்களின் தன்மைகளுக்கேற்றவாறும் உணவிற்காகவும் நீர் நிலைகளை நாடி இடம் பெயரத் தொடங்கினர். இவ்வாறு இடம் பெயர்ந்து இந்தியா எங்கும் பரவிய திராவிட இனம், மூல மொழியான தமிழுடன் வேறு வகை ஒலிகளையும் சேர்த்து பிரிதொரு மொழிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியது.

திராவிட மொழிக் குடும்பத்தை மொழியியலார். தென் இந்தியத் திராவிடமொழிகள், மத்திய இந்திய திராவிட மொழிகள், வடஇந்திய திராவிட மொழிகள் எனப் பகுப்பார்கள். தென்னக திராவிட மொழிகளை இரண்டு பகுதியாக நோக்கப்படுகிறது. இலக்கிய வளமுள்ள திராவிட மொழிகள். இலக்கிய வளமில்லா திராவிட மொழிகள் என இதனை வரையறை செய்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை இலக்கிய வளமிக்கவை.மலையின திராவிட மக்களால் பேசப்படும் தோடா, கோத்தர், படுகு, கேடகு, துளு, வர, கொலமி, நயினி முதலான மொழிகள் பேசப்படினும் இலக்கிய வளம் இல்லாதவை.அதே போன்று பலுகிஸ்தானில் திராவிட பழங்குடி மக்களால் பேசப்படும் பிரோகுய், மத்திய இந்தியாவில் பேசப்படும் பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா முதலிய தொன்மை திராவிட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளதேயன்றி இலக்கிய வளம் இல்லாதவை.

பெருங்கற்காலத் தொடக்கத்திலேயே திராவிட மொழிகளின் தாயான தமிழ் சீரிய பயன்பாட்டில் விளங்கியுள்ளது. அச்சமயம் பதிவு செய்திடும் சாதனமோ, வழிமுறைகளோ, அதனை உருவாக்கும் சிந்தனையோ எழவில்லை. காலப்போக்கில் பாறைகளைப் பண்படுத்தும் நுட்பம் அறிந்த வெகுகாலத்திற்குப் பின்புதான் பாறையில் செதுக்கத் தொடங்கி இருத்தல் கூடும். இந்தப் பதிவுகளைச் செய்திடும் முன்பு தமிழ் மொழி மனங்களிலும், மனத்திரைகளிலும் நினைவாற்றல் எனும் திறனாலேயே பதிவு செய்யப்பட்டன. மனித மனம் ஒன்றை அறிந்தவுடன் அதனை மறவாமல் நினைவில் நிறுத்தும் பொருட்டு இயல்பான இலக்கண சூத்திரங்கள் தமிழ் மொழியில் அன்றே பயன்படுத்தியுள்ளனர்.

திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பலமொழிகள் பிரிந்தாலும் மூலமொழியான தமிழ் இன்றளவும் தன் நயத்தை இழக்காமல் என்றும் இளமையாக விளங்கக் காரணமே அதன் இலக்கண கட்டமைப்புதான்.இயற்கை மொழியாம் தமிழ் தன் குடும்பத்திலிருந்து பிற திராவிட மொழிகள் பிரிந்த போதும் எவ்வித மாற்றமும் இல்லாமல் எத்தகைய மாற்றங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் வகையில் உரிய கட்டமைப்புடன் இயங்குவதால் கி.மு.ஆயிரமாவது ஆண்டுகளில் அதாவது கற்காலப் பண்பாட்டின் இடைக் காலத்திலேயே கிளை மொழிகள் பிரிந்தாலும் தனித்துவமாக இன்றும் துலங்கி வருகிறது.இவ்வாறு மொழி மட்டுமே துலங்கவில்லை. தமிழும் அதைப் பேசும் தமிழினமும் உலகெங்கும் பரவி உலக மொழிகளில் தனக்கென ஓர் உன்னதமான நிலையை அடைந்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிதான் தமிழினத்தின் வளர்ச்சியும் என்பது நோக்கத்தக்கது.

வரிவடிவ வரலாறுதமிழ் எழுத்துக்கள் இன்றைய வடிவிற்கு மாற்றம் காண பல நூற்றாண்டுகளைக் கடந்தன. ஒலியாய் விளங்கிய பேச்சுத் தமிழ் மொழி வரிவடிவாய் உருப்பெற்றிட்டது எக்காலம் எனும் ஆய்வு இன்னமும் தொடர்கிறது. எனினும் (ஒலியை வரிவடிவமாக்கும் திண்மை, அச்சிந்தனை எக்காலத்தில் உருவாகி இருக்கலாம் என்று யூகிப்பதற்கும் அந்த யூகங்கள் நிலை பெற்றிடவும் ஏராளமான சான்றுகள் அகழ்வு ஆய்வுகளில் கிடைத்துள்ளன.)

பொதுவாக தமிழ் எழுத்து வரிவடிவத்திற்கான சிந்தனை வடக்கிலிருந்து தென்னகமாம் தமிழ் நிலத்தில் புகுந்ததாக பல வரலாற்று தொல்லியலார் கூறுகின்றனர். எனினும் பேரறிஞர் பாவாணரின் கூற்றுப்படி மனித நாகரீக தோற்றமே தென்னகத்தில் தான் நிகழ்ந்தது. எனவே எத்தகைய ஆய்வுகளும் இங்கிருந்து தான் தொடங்க வேண்டும் என்கிறார். இது குறித்து அவர் கூறியது "ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றதே ஒரு நாட்டிற்கு உரிமை வரலாற்று சான்றாகும்.ஆயின் ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப்படலாம். அது போன்றே ஒரு நாட்டு வரலாறும் பகைவரால் அவரவர்க்கு ஏற்றவாறு மாற்றப்படலாம். ஆதலால் இவ்விரு வகையிலும் உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார். இவருக்கு முன்னோடியாக பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பி.டி.சீனிவாசய்யங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் போன்ற அறிஞர் பெருமக்களும் கூறியுள்ளனர்.இவர்கள் கூற்று மெய்யே என்பது போல் அரிக்கமேடு, உறையூர் தொடங்கி ஈழம் வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காணப்பட்ட திராவிட வரிவடிவம் தமிழே என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.அரிக்கமேட்டில் கிடைத்த பொருட்களில் பொரித்துள்ள எழுத்து வரி உருக்கள் கி.பி.முதல் நூற்றாண்டுக்கும் முன்னம் பொரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்ற எழுத்துருக்கள் ஈழத்தில் நிகழ்ந்த அகழ்விலும் கண்டறிந்துள்ளனர் என்பதை இலங்கை வரலாற்று அறிஞர் கருணா இரத்தினா சுட்டிக் காட்டுகிறார்.

புத்தர் காலத்திற்கு முன்பே கி.மு.5ஆம் நூற்றாண்டில் அதாவது அசோகரின் காலத்திற்கு சில நூற்றாண்டிற்கு முன்பே திராவிட நிலத்தில் வழக்கிலிருந்த மொழிகளைப் பற்றியும் வரிவடிவங்கள் பற்றியும் அசோகர் காலத்து பவுத்த நூலான லலிதவிஸ்தாரம் அன்றைக்கு வழக்கில் இருந்த பிராமி, திராவிட வரிவடிவங்களுடன் மொத்தம் அறுபத்து நான்கு வரிவடிவம் காணப்பெற்றதாகக் கூறுகிறது. அதைப் போன்றே சமண நூல் சமவயாங்க சூக்தமும், பன்னவான சூக்தமும் கி.மு.5ஆம் நூற்றாண்டில் பதினெட்டு வரிவடிவம் காணப்பட்டதாகவும் அதில் திராவிடமும் ஒன்று எனக் கூறுகிறது.தமிழ்கத்திலும், ஈழத்திலும் காணப்பட்ட தமிழ் வரிவடிவங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தன என்கிறார் ப்யூலர் எனும் அறிஞர்.

தமிழின் தொன்மை வரிவடிவம் தொடர்பான ஆய்வுகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பெருமளவு தொடங்கின. தொடக்கத்தில் கல்வெட்டு, பாறை செதுக்கல் வரிவடிவங்களைப் படித்து விளக்கம் கூறி ஆய்வுக்கு வழிவகுத்தவர் பிரின்செப் எனும் ஆய்வாளராவார். இவ்வாறு ஆய்வில் வெளிப்பட்ட பல உண்மைகளை மேலும் தெளிவாக அறிஞர்கள் ஆய்வு செய்து ஒரு பட்டியலை வெளிட்டுள்ளனர்.
19ஆம் நூற்றாண்டு வரையுள்ள இந்த வரிவடிவங்கள். 17ஆம் நூற்றாண்டில் அச்சேறிய போது சுவடி எழுத்துக்களை ஒட்டியே காணப்பட்டன. பின்னர் வீரமா முனிவர் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்தில் சீர்மை கண்டவுடன் தமிழின் வரிவடிவம் மேலும் அழகு பெற்றன. அது மேலும் ஹண்ட் எனும் அச்சுவியலாளரால் செம்மையாக ஈய அச்சுருக்களின் உதவியால் அதன் மொத்த வடிவமும் ஓர் உலகார்ந்த கட்டமைப்புக்குள் உருப்பெற்றது. காலங்கள் மாறிடினும் இன்று கணியத்தில் அழகுற தமிழ் தன் இளமையான தோற்றப் பொலிவுடன் விளங்கி வருகிறது.
நன்றி: http://kaniyatamil.com

தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 6

யாழ் ஞானப் பிரகாச சுவாமிகள் - (பதினேழாம் நூற்றாண்டு)

ஜே.பி.ரட்லர் -

ரேவண சித்தர் - (பதினாறாம் நூற்றாண்டு)

வீரமாமுனிவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

வடகத்திருவீதிப் பிள்ளை - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

வடநெடுந்தத்தனார் - (சங்க காலம்)

வடமவண்ணக்கன் தாமோகதரனார் - (சங்க காலம்)

வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் - (சங்க காலம்)

வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் - (சங்க காலம்)

வண்ணக் களஞ்சியப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

வரகவி சுப்ரமணியபாரதி -

வரகுண இராம பாண்டியன் - (பதினாறாம் நூற்றாண்டு)

வரத பண்டிதர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

வரதுங்க ராம பாண்டியன் - (பதினாறாம் நூற்றாண்டு)

வன்பரணர் - (சங்க காலம்)

வாணிதாசன் -

வாமன முனிவர் - (பதினான்காம் நூற்றாண்டு)

விசாகப் பெருமாளையர் -

விண்ணாயனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

சுவாமி விபுலானந்தர் - (1892 - 1947 )

வில்லிப்புத்தூரார் - (பதினான்காம் நூற்றாண்டு)

விழா சோலைப் பிள்ளை - (பதினான்காம் நூற்றாண்டு)

விளம்பி நாகனார் - (ஆறாம் நூற்றாண்டு)

டாக்டர்.வின்ஸ்லோ -

விஜய ராகவ பிள்ளை -

விஸ்வநாத சத்திரியர் -

வீர பாண்டியன் -

வீர ராகவ முதலியார் -

வீரக்கவிராயர் - (பதினாறாம் நூற்றாண்டு)

வீரபத்ர முதலியார் -

வீராசாமிச் செட்டியார் -

வீரைகவிராச பண்டிதர் - (பதினாறாம் நூற்றாண்டு)

வெண்ணிக் குயத்தியர் - (சங்க காலம்)

வெள்ளைக்குடி நாகனார் - (சங்க காலம்)

வெற்றிமாலைக் கவிராயர் - (பதினான்காம் நூற்றாண்டு)

வேத நாயக சாஸ்திரியார் -

வேத நாயகம் பிள்ளை -

வேதகேசரி முதலியார் -

வேதாரண்யம் பிள்ளை -

வைத்தியநாத தீட்சிதர் - (பதினேழாம் நூற்றாண்டு)

வைத்தியலிங்கம் பிள்ளை -

எஸ்.வையாபுரிப் பிள்ளை -

ஜா

ஜோர்ஜ் எல்.ஹார்ட் -

பா.ஜீவனாந்தம் -

ஜெகசிற்பியன் -

ஜெகவீர பாண்டியன் -

நன்றி: http://www.kaniyatamil.com

தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 5

பக்குடுக்கை நன்கணியார் - (சங்க காலம்)

பகழிக் கூத்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

பட்டினத்தார் - (பதினான்காம் நூற்றாண்டு)

படிக்காசுப் புலவர் - (பதினேழாம் நூற்றாண்டு)

பத்திரகிரியார் - (பதினான்காம் நூற்றாண்டு)

பம்மல் சம்பந்த முதலியார் -

பரசமயகொளரிமாமுனி - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

பரசுராமன் கவிராயர் -

பரஞ்சோதி - (பதினாறாம் நூற்றாண்டு)

பரணர் - (சங்க காலம்)

பரம முனிவர் - (பதினான்காம் நூற்றாண்டு)

பரவாதி கேசரியார் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

பலபட்டாடை சொக்கநாதப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

பவணந்திமுனிவர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

பவாணந்தம் பிள்ளை -

பன்னிரு ஆழ்வார்கள் - (ஏழாம் நூற்றாண்டு)

பாண்டரங்கண்ணனார் - (சங்க காலம்)

பாண்டித்துரைத் தேவர் -

பாண்டியன் அறிவுடை நம்பி - (சங்க காலம்)

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் - (சங்க காலம்)

பாம்பன் சுவாமிகள் -

பாரதம் பாடிய பெருந்தேவனார் - (சங்க காலம்)

பாரதியார் -

பாரி மகளிர் - (சங்க காலம்)

பால்வண்ண முதலியார் -

பாவேந்தர் பாரதிதாசன் (கனகசுப்பரத்னம்) - (1891-1964)

பிங்கலர் - (பத்தாம் நூற்றாண்டு)

பிசிராந்தையார் - (சங்க காலம்)

பிரதிவாதிபயங்கரம் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

பிள்ளைப் பெருமாள் - (பதினேழாம் நூற்றாண்டு)

பின் வேலப்ப தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

பின்பழகிய பெருமாள் ஜீயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

பின்னத்தூர் நாராயணசுவாமி அய்யர் -

பீதாம்பரப் பிள்ளை -

புகழேந்திப் புலவர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

புத்தமித்தரனார் - (பதினோரம் நூற்றாண்டு)

புல்லங்காடனார் - (ஆறாம் நூற்றாண்டு)

புலவர் குழந்தை -

புறத்திணை நன்னாகனார் - (சங்க காலம்)

பூண்டி அரங்கநாத முதலி -

பூதனை செந்தனார் - (கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு)

பெருங்குன்றுப் பெருங்கசிக்கனார் - (சங்க காலம்)

பெருங்குன்றூர் கிழார் - (சங்க காலம்)

பெருங்கோழி நாய்கன் மகள்நக்கண்ணையார் - (சங்க காலம்)

பெருஞ்சித்திரனார் - (சங்க காலம்)

பெருந்தலைச் சாத்தனார் - (சங்க காலம்)

பெருந்தேவனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

பெரும்பதுமனார் - (சங்க காலம்)

பெருவயின் முல்லையார் - (ஆறாம் நூற்றாண்டு)

பேய்மகள் இளவெயினியார் - (சங்க காலம்)

பொய்கையார் - (கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு)

பொய்கையார் - (சங்க காலம்)

பொய்யாமொழிப் புலவர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

பொருந்திலிளங்கீரனார் - (சங்க காலம்)

பொன்னவன் - (பதினோரம் நூற்றாண்டு)

போசராசர் - (பதினான்காம் நூற்றாண்டு)

ஜி.யு.போப் - (1820-1908)

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

மணவாள மாமுனி - (பதினைந்தாம் நூற்றாண்டு)

மணவாளப் பெருமார் நாயனார் - (பதினான்காம் நூற்றாண்டு)

மதுரக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

மதுரை மருதன் இளநாகனார் - (சங்க காலம்)

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் - (சங்க காலம்)

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் - (சங்க காலம்)

மறைஞான சம்பந்தர் - (பதினாறாம் நூற்றாண்டு)

மறைமலை அடிகள் -

மனவாசங்காத்தனர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

மாங்குடி கிழார் - (சங்க காலம்)

மாணிக்க நாயக்கர் -

மாணிக்கவாசகர் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

மாதவய்யா -

மாம்பழக்கவி சிங்க நாவலர் -

மாறன் பொறையனார் - (ஆறாம் நூற்றாண்டு)

மாறோக்கத்து நப்பசலையார் - (சங்க காலம்)

மிக மான் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

மீனாட்சி சுந்தர கவிராயர் -

மீனாட்சி சுந்தரம் பிள்ளை -

முகம்மது உசேன் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

முத்தப்ப செட்டியார் -

முத்து தம்பிப்பிள்ளை -

முத்து வீரைய்ய உபாத்தியாயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

முத்து வேங்கடசுப்பையா -

முத்துராசன் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

முத்துராம முதலியார் -

முரஞ்சியூர் முடிநாகனார் - (சங்க காலம்)

முனைப் பாடியார் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

மூவடியார் - (ஆறாம் நூற்றாண்டு)

மூன்றுரை அரையனார் - (ஆறாம் நூற்றாண்டு)

மெய்கண்டார் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

மெய்மொழித் தேவர் - (பதினான்காம் நூற்றாண்டு)

மோசிகீரனார் - (சங்க காலம்)

நன்றி: http://www.kaniyatamil.com

தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 4

ஞானக்கூத்தர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

ஞானவ உடையார் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

தத்துவ போதக சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

தண்டபாணி சுவாமிகள் - (1840-1899)

தத்துவராய சுவாமிகள் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

தனி நாயகம் அடிகள் - (1913-1980)

தாண்டவராய சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

தாண்டவராய முதலியார்

தாமற் பல்கண்ணனார் - (சங்க காலம்)

தமிழ் ஒலி, கவிஞர் -

தாமோதரனார், சி.வை. -

தாயுமானவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

திரிகூடராசப்பக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

திருக்குருகைப் பெருமாள் கவிராயர் - (பதினாறாம் நூற்றாண்டு)

திருக்குறுக்கை பெருமாள் கவிராயர் - (பதினாறாம் நூற்றாண்டு)

திருச்சிற்றம்பல தேசிகர் -

திருத்தக்கத் தேவர் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

திருநாவுக்கரசர் - (ஏழாம் நூற்றாண்டு)

திருநெறி விளக்க முத்தையர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

திருமலை நாதர் - (பதினாறாம் நூற்றாண்டு)

திருமூல நாயனார் - (ஆறாம் நூற்றாண்டு)

திருவள்ளுவர் - (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு)

தீ சீரியரத்னா கவிராயர் -

துரைசாமி மூப்பனார் -

துறையூர் ஓடைகிழார் - (சங்க காலம்)

தேசிக வினாயகம் பிள்ளை -

தேவராய சுவாமிகள் -

தொட்டிக் கலை சுப்பிரமண்ய முதலியார் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

தொண்டைமான் இளந்திரையன் - (சங்க காலம்)

தொல்காப்பியர் - (சங்க காலம்)

தோலாமொழித்தேவர் - (பத்தாம் நூற்றாண்டு)

நக்கீரர் - (சங்க காலம்)

நடேச சாஸ்திரியார் -

நமச்சிவாயக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

நரிவெரூஉத்தலையார் - (சங்க காலம்)

நல்லாதனார் - (கி.பி.நான்காம் நூற்றாண்டு)

நல்லாப்பிள்ளை - (பதினாறாம் நூற்றாண்டு)

நவநீத நாதர் - (பதினான்காம் நூற்றாண்டு)

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை -

நாற்கவிராசநம்பி - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

நிரம்ப அழகிய தேசிகர் - (பதினாறாம் நூற்றாண்டு)

நீலகண்ட சுவாமிகள் -

நீலாய தாஷி - (பதினைந்தாம் நூற்றாண்டு)

நெட்டிமையார் - (சங்க காலம்)

நெடும்பல்லியத்தனார் - (சங்க காலம்)

நெற்குன்றவானர் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

நையினார் ஆசிரியர் - (பதினான்காம் நூற்றாண்டு)

நைனா முகம்மது புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

நன்றி: http://www.kaniyatamil.com

தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 3

சங்கர அரணனார் - (பதினான்காம் நூற்றாண்டு)

சங்கர நாராயண சாஸ்திரி -

சங்கரதாஸ் சுவாமிகள் -

சடகோப தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சண்முகம் பிள்ளை -

சதாசிவப் பிள்ளை பாவலர் -

சந்தக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சபாபதி நாவலர் -

சம்பந்தர் - (ஏழாம் நூற்றாண்டு)

சர்க்கரைப் புலவர் - (பதினேழாம் நூற்றாண்டு)

சரவண தேசிகர் -

சரவண பெருமாள் கவிராயர் -

தி.த.சரவணமுத்து பிள்ளை -

சவ்வாதுப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சாத்தந்தையார் - (சங்க காலம்)

சாந்தலிங்க சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சாந்தலிங்கக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சாந்துப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சாமிநாதய்யர் உ.வே. -

சாலாம்பிகை -

சிங்காரவேலு முதலியார் -

சித்திலெப்பை மரைக்காயர் -

சிதம்பர சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சிதம்பரநாதமுனி - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சிதம்பரநாத கவி - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சிதம்பரம் பிள்ளை -

வ.உ.சிதம்பரனார் -

சிவ வாக்கியர் - (பதினான்காம் நூற்றாண்டு)

சிவக்கொழுந்து தேசிகர் -

சிவகிரி யோகிகள் - (பதினாறாம் நூற்றாண்டு)

சிவஞான யோகி -

சிவப்பிரகாச சுவாமிகள் -

சிவான சுவாமிகள் (எ) சிவஞான முனி - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சிறுமணவூர் முனுசாமி முதலியார் -

சின்ன சரவண பெருமாள் கவிராயர் -

சின்னா மலையார் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சின்னைய்ய செட்டியார் -

சீகன் பால்கு அய்யர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சீரக் கவிராசப் பிள்ளை - (பதினாறாம் நூற்றாண்டு)

சீரைக் கவிராயப் பிள்ளை -

சீனிவாசப் பிள்ளை -

சுந்தரம் பிள்ளை -

கே.ஜி.சுந்தரம் -

சுந்தரர் - (ஏழாம் நூற்றாண்டு)

சுப்ரதீபக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)

சுப்ரமண்ய தீட்சிதர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சுப்ரமணிய சிவா -

சுப்ரமணிய முதலியார் -

ஐ.மு.சுப்ரமணிய முதலியார் -

சி.கே.சுப்ரமணிய முதலியார் -

சுப்ரமணியப்பிள்ளை -

வி.வி..சுப்ரமணியர் -

சுவாமிக் கவிராயர் -

சுவாமிநாத தீட்சிதர் - (பதினேழாம் நூற்றாண்டு)

சூரிய நாராயண சாஸ்திரி (எ) பரிதிமாற் கலைஞர்

செய்குதம்பிப்பாவலர் -

செயங்கொண்டார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

செற்றூர் சுப்ரமண்ய கவிராயர் -

சேக்கிழார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

சேகு இஸாக்கு - (பதினான்காம் நூற்றாண்டு)

ரா.பி.சேதுப்பிள்ளை -

சேந்தன் திவாகரம்அறிவனார் - (எட்டாம் நூற்றாண்டு)

சேரக் கவிராசப் பிள்ளை -

சேரமான் கணைக்காலிரும்பொறை - (சங்க காலம்)

சேரமான் பெருமாள் நாயனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

டி.என்.சேஷாசலம் -

சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் - (சங்க காலம்)

சோமசுந்தர நாயகர் -

சோழவந்தான் சண்முகம் பிள்ளை -

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் - (சங்க காலம்)

சோழன் நலங்கிள்ளி - (சங்க காலம்)

சோழன் நல்லுருத்திரன் - (சங்க காலம்)

நன்றி: http://www.kaniyatamil.com/

தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 2

கால்டுவெல் ஐயர்

கச்சி ஞானப்பிரகாசர் - (பதினாறாம் நூற்றாண்டு)

கச்சியப்ப சிவாச்சாரியர் - (பதினான்காம் நூற்றாண்டு)

கச்சியப்ப முனிவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி - (சங்க காலம்)

கடிகை முத்துப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

கடியலூர் உருத்திரங்கண்ணனார் - (சங்க காலம்)

கண்ணதாசன்

கண்ணம் பூதனார் - (ஆறாம் நூற்றாண்டு)

கண்ணன் கூத்தனார் - (ஆறாம் நூற்றாண்டு)

கண்ணுடை வள்ளல் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

கணபதி அய்யர் -

கணித மேதாவியார் - (ஆறாம் நூற்றாண்டு)

கணித மேதையார் - (ஆறாம் நூற்றாண்டு)

கணியன் பூங்குன்றன் - (சங்க காலம்)

கணேச பண்டிதர் -

கதிரேசன் செட்டியார் -

நா.கதிரைவேற் பிள்ளை - (1871 - 1907)

கந்தசாமிக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)

கந்தசாமிப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

கந்தப்பர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

கந்தாப் பிள்ளை -

கபிலத்தேவர் - (கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு)

கபிலர் - (சங்க காலம்)

கம்பர் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

கம்பன் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

கமலை ஞானப்பிரகாசர் - (பதினாறாம் நூற்றாண்டு)

கயாதரர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

கருங்குழலாதனார் - (சங்க காலம்)

கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் - (சங்க காலம்)

கருவூரூர் சித்தர் - (பதினாறாம் நூற்றாண்டு)

கல்கி.கிருஷ்ணமூர்த்தி -

திரு.வி.கல்யாணசுந்தரனார்

கல்லாடனார் - (பதினோரம் நூற்றாண்டு)

கல்வி களஞ்சியப் புலவர்

கழாத்தலையார் - (சங்க காலம்)

கள்ளில் ஆத்திரையனார் - (சங்க காலம்)

காகபுசுண்டர் - (பதினாறாம் நூற்றாண்டு)

காசிவிஸ்வநாத முதலியார்

காடு வெளிச் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

காண்டியர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

காந்தியர் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

கார்த்திகேய முதலியார்

காரி கிழார் - (சங்க காலம்)

காரியாசர் - (ஆறாம் நூற்றாண்டு)

காரியார் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

காரைக்காலம்மையார் - (ஆறாம் நூற்றாண்டு)

கால்டுவேல் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

காவற்பெண்டு - (சங்க காலம்)

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் - (சங்க காலம்)

காள மேகப் புலவர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

கிருஷ்ணப் பிள்ளை

குகை நமச்சிவாயர் - (பதினாறாம் நூற்றாண்டு)

குடபுலவியனார் - (சங்க காலம்)

குணங்குடி மஸ்தான் சாகிப் -

குணத்தான் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

குணவீர பண்டிதர் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

குதம்பைச் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

குமரகுருபர தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

குமரகுருபரர் - (பதினேழாம் நூற்றாண்டு)

குமார சுவாமி தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

குமார சுவாமிப்பிள்ளை

குமாரசாமிப் புலவர்

குரு நமச்சிவாயர் - (பதினாறாம் நூற்றாண்டு)

குருபத தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

குருமுனி அடிகள் - (பதினான்காம் நூற்றாண்டு)

குலாம் காதிரு நாவலர் -

குறமகள் இளவெயினியார் - (சங்க காலம்)

குறுங்கோழியூர் கிழார் - (சங்க காலம்)

கூடலூர்க் கிழார் - (கி.பி.நான்காம் நூற்றாண்டு)

கொங்கணாச் செட்டியார் - (பதினாறாம் நூற்றாண்டு)

கொங்குவேளிர் - (எட்டாம் நூற்றாண்டு)

கோபாலகிருஷ்ண பாரதி

கோவூர் கிழார் - (சங்க காலம்)

கோவை அம்பலநாதத்தம்பிரான் - (பதினான்காம் நூற்றாண்டு)

கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் - (சங்க காலம்)

கோனிரியப்ப நாவலர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

நன்றி: http://www.kaniyatamil.com

தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 1

அகப்பேய் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

அகிலாசனார்

அகோர முனிவர் - (பதினேழாம் நூற்றாண்டு)

அடியார்க்கு நல்லார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

அண்ணாமலை ரெட்டியார் - (1861-1890)

அதிவீர ராமபாண்டியன் - (1564-1606)

அதிமதுரக்கவிராயர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

அதிமதுரக்கவி வீரராகவ முதலியார் - (பதினேழாம் நூற்றாண்டு)

அப்பிள்ளைக்கவி - (பதினைந்தாம் நூற்றாண்டு)

அப்புலைய்யர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அபிராமி பட்டர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அம்பலவாணக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அமிர்தசாகரர் (எ) குணசாகரர் - (பதினோரம் நூற்றாண்டு)

அய்யனரித்தனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

அரிசில் கிழார் - (சங்க காலம்)

அரிதாசர் - (பதினாறாம் நூற்றாண்டு)

அருணந்தி சிவாச்சாரியார் - (பதினாறாம் நூற்றாண்டு)

அருணாகிரியார் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

அருணாச்சலக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அருணாசலப் பெருமாள் எம்பெருமானார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

அருநந்தி சிவம் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

அருமருந்து தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அருள் நமச்சிவாயர் - (பதினான்காம் நூற்றாண்டு)

அருளாளப்பெருமாள் எம்பெருமான் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

அழகிய சிற்றம்பலக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)

அழகிய நம்பி - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அழுகுனிச் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

ஆறுமுக நாவலர் - (1822 - 1879)

ஆண்டிப் புலவர் - (பதினேழாம் நூற்றாண்டு)

ஆதிச்சத்தேவர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

ஆதிமூல முதலியார் -

ஆதிவராக கவி - (பதினைந்தாம் நூற்றாண்டு)

ஆபிரகாம் பண்டிதர் -

ஆரணி குப்புசாமி முதலியார் -

ஆலத்தூர் கிழார் - (சங்க காலம்)

ஆவூர் மூலங்கிழார் - (சங்க காலம்)

ஆவூர்தி நாதர் - (பதினான்காம் நூற்றாண்டு)

ஆறுமுகப்புலவர் -

ஆனந்த பாரதி அய்யங்கார் -

ஆனந்தக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)

இடைக்காடர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

இடைக்காடனார் - (சங்க காலம்)

இரங்கராஜு -

இரத்தியார் - (பதினான்காம் நூற்றாண்டு)

இராகவ அய்யங்கார்.மு.

இராகவய்யங்கார்

இராகவய்யங்கார்.உ

இராம பாரதி

இராமச்சந்திர கவிராயர்

இராமநாத சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

இராமலிங்க அடிகள்

இராமனுஜக் கவிராயர்

இராஜம் அய்யர்

இரும்பிடர்த்தலையார் - (சங்க காலம்)

இரேவண சித்தரர் - (பதினாறாம் நூற்றாண்டு)

இளங்கோவடிகள் - (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு)

இறையனார் - (எட்டாம் நூற்றாண்டு)

உதிசித் தேவர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

உபேந்திராச்சாரியார் - (பத்தாம் நூற்றாண்டு)

உமறுப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

உமாபதி சிவாச்சாரியார் - (பதினான்காம் நூற்றாண்டு)

உலக நாதர் - (பதினாறாம் நூற்றாண்டு)

உவமைக்கவிஞர் சுரதா

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் - (சங்க காலம்)

உறையூர் மருத்துவன் தாமோதரனார் - (சங்க காலம்)

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - (சங்க காலம்)

ஊத்துத்தம்பிப் புலவர்

ஊன்பொதி பசுங்குடையார் - (சங்க காலம்)

எல்லப்ப நாவலர் - (பதினேழாம் நூற்றாண்டு)

ஐயூர் முடவனார் - (சங்க காலம்)

ஐயூர் மூலங்கிழார் - (சங்க காலம்)

ஒட்டக்கூத்தர் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

ஒப்பிலா மணிப்புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

ஒப்பிலாக்கிருஷ்ணதாசர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

ஒருசிறைப் பெரியனார் - (சங்க காலம்)

ஒரேருழவர் - (சங்க காலம்)

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - (சங்க காலம்)

ஒளவையார் - (சங்க காலம்)

ஒளவையார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

நன்றி: http://www.kaniyatamil.com

மொழி ஊழல்

தமிழ்ப்பணி என்பது பதனீரால் பனைவெல்லம் காய்ச்சுவது போன்றதா? என்று கடுவினா எழுப்பினர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். யாரைப் பார்த்து என்றால், தமிழறிஞர்கள், தமிழரசியலார், கவிஞர்கள், இதழாளர்கள் போன்ற அனைவரையும் பார்த்து!
தமிழறிஞர்கள் கூடி, கம்பனையும் இளங்கோவையும் வள்ளுவரையும் போற்றிவிட்டால் அது தமிழ்ப்பணியா?அரசியலார், தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க! என்று கூட்டத்தில் முழங்கிவிட்டால் அது தமிழ்ப்பணியா?
கவிஞர்கள், பெண்ணையும் பெண்ணின் கண்ணையும் பாடி, கொஞ்சம் மரம் செடி கொடிகளைப் பாடி, பின்னர் ஏழையையும் ஏழையின் வயிற்றையும் பாடி விட்டால் அது தமிழ்ப்பணியா? பலமொழிகளைக் கலந்து, பெண்களின் ஆடைகளை நழுவவிட்ட/உதறிவிட்ட படங்களைப்போட்டு கோடி கோடியாக தினமும் இதழ்களை விற்றுவிட்டால் அது தமிழ்ப்பணியா? மடற்குழு ஒன்றைத் தொடங்கி அதில் தமிழிலும் எழுதிவிட்டால் அது தமிழ்ப்பணியா? இணைய இதழ் ஒன்று தொடங்கி அதில் உல்லாசத்தையும், ஊருக்கொருவரின் படைப்புகளைப்போட்டு, இலக்கியம், இலக்கணம், அரசியல், நகைச்சுவை, உளறல், பிதற்றல் என்று பலவற்றைப்போட்டு, தனிமனிதர்களின் சிறப்புகளை அரங்கேற்றுவது தமிழ்ப்பணியா? தமிழை நன்கு கற்று, பின்னர் மண்டைக் கிறுக்கெடுத்து, பகையை நக்கி, பல்லிளித்துப் பதவியின் உச்சியில் அமர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் செய்கிறேன் என்ற போர்வையில் மானங்கெட்டலைவது தமிழ்ப்பணியா? ஏழைத்தமிழர் சிலரைக் கூட்டி அவர்க்கு சொக்காய் வாங்கிக் கொடுத்து சோறு போட்டு அனுப்புதல் தமிழ்ப்பணியா? இவையாவும் தமிழ்ப்பணிதான்; இருந்தபோதும் இவையே போதுமா என்று ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக் கொள்வது வேண்டும். இவையாவும் தமிழ்ப்பணிதான் ஆயினும் பெரும்பாலும் தன்னொழுக்கம் இல்லாதாரால் செய்யப்படும் தமிழ்ப்பணி! இவையாவும் தமிழ்ப்பணிதான்; தமிழாண்மையும் நேர்மையும் குறைந்தோரால் பெரும்பாலும் செய்யப்படும் தமிழ்ப்பணி! தமிழும் தமிழ் நிலமும் பாழ்பட்டுக் கிடக்கின்றன.
இந்நாள் அல்ல அந்நாள் முதற்கொண்டு. காலகாலமாய் திட்டமிடப்பட்டு தமிழ்க் கொலை நிகழ்கின்றது. மொழி தமிழாய் இல்லை. இறை தமிழாய் இல்லை. கல்வி தமிழாய் இல்லை. பண்பும் தமிழாய் இல்லை. பேச்சும் எழுத்தும் தமிழாய் இல்லை. ஆக்கமும் தமிழில் இல்லை; அழிவே உள்ளது. அரசும் தமிழில் இல்லை. அரசர்களும் தமிழுக்கில்லை; செடியொன்று இருந்தால் களை ஆங்கு பத்தாம். பகையைப் போற்றி பகையடி வருடும் தமிழர் ஆயிரமாயிரம். குச்சி மிட்டாய்க்கும் குலத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழர் ஆயிரமாயிரம். மூவாயிரமாண்டின் தமிழ் பேசுவான்! மூன்று சங்கங்களையும் மூச்சு விடாமல் பேசுவான்! ஆனால், பகையின் செருப்பை தலையில் சுமப்பான்; அது தமிழ்தான் என்பான்! இப்படியே இந்தக் குமுகாயம் தன்னை மறந்து தன் தேவையை மறந்து எத்தனை நாள் போகும்? போக முடியும்? மறைமலையடிகளார், பாரதிதாசனார், பாவாணர், பெரியார், பெருஞ்சித்திரனார் போன்றோர் எத்தனை முறை தோன்றுவார்கள். இவர்கள் இத்தமிழகத்துக்குத் தந்து போனவற்றை எத்தனை பேர் நடைமுறைப் படுத்துகிறார்கள்? இவர்கள் யாவரையும் நாமறிவோம்! தமிழ் கூறு நல்லுலகம் அறியும். ஆயினும் அன்னார் சொன்னவற்றை நாம் பயின்றும் பழக்கத்தில் கொண்டு வருவதில்தான் நாம் சோம்பிக்கிடக்கிறோம். அல்ல, அல்ல! இன்னும் மாயைக்குள் கிடக்கிறோம்.
தமிழிலே களைகள். தமிழர்களிடையே பகைவரோடு களைகளும்!தமிழர்களுக்கு இடையே களைகள்; இறைவனுக்கும் தமிழனுக்கும் இடையே களைகள்! தமிழுக்கு இருக்கும் இன்றைய சிக்கல்களை மேலோட்டமாக எதிர்ப்பதுவும், அலசுவதும், நுனிக்கிளையில் அமர்ந்து அடியை வெட்டுவது போன்றாகும். இதோ, நான் தமிழன்! தமிழெங்கள் உயிருக்கு நேர்!; என்று பேசுவதெல்லாம் போதாது! ஈராக்கிலே அமெரிக்கா குண்டைப் போட்டால் அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்று குரல்கள் உலகெங்கும் ஒலிக்கின்றன! பிரித்தானியப் பொருள்களை வாங்காதே, பயன்படுத்தாதே என்று காந்தியார் சொன்னபோதுதான் பிரித்தனுக்கு மிகவும் உரைத்தது. எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால்தான் அகல வேண்டியது அகலும்; அதேபோல், தமிழுக்கும் தமிழருக்கும் வேதனை தருவது யாது? யாவர்?
மொழியிலே, எழுத்திலும் பேச்சிலும் புரளும் மொழிக்கலப்பு ஒரு வேதனை!இறைவனுக்கு இடையே திரைபோடும் அயன்மொழி ஒரு வேதனை! நாமும், தமிழிலே இறைப் பாடல்கள் பாட வேண்டும் என்று கதறுகிறோம்!கேட்பாரில்லை! பகைவர் கேட்கமாட்டார். ஏன் கேட்க மாட்டார் என்றால், நம்மிடம் தன்னொழுக்கம் இல்லை. நமது எழுத்துக்களில் பகையைப் புழங்கவிட்டு விட்டு, இறைவனடியில்மட்டும் அதைச் சேர்க்காதே என்றால் பகைவர் விடுவாரா? சிரித்துவிட்டு நம்மை இளிக்க வைப்பார்கள். அதே நேரத்தில், தமிழ்ப்பகைவர்களை கேள்வி கேட்க நமக்கு அருகதை இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்! அதற்கான தன்னொழுக்கம் நமக்கு உண்டா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நமது எழுத்துக்களில் வடமொழியை புழங்கவிட்டு விட்டு, பகைவர் நம் இறையின்முன்னே வடமொழியில் புழங்குகிறார் என்று கூவினால் அது பம்மாத்து! எப்படி காந்தியார் பிரித்தானியப் பொருட்களை வாங்காதீர் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி வெற்றி கண்டாரோ, அதே பாங்கில்தான் மறைமலையாரும், பாரதிதாசனும், பெருஞ்சித்திரனாரும் இன்னும் இவரைப்போன்ற பலரும் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், இந்தப் பாழுஞ்சமுதாயம் அதை எடுத்துக் கொள்ளாமல், மேலும் தமிழை சிதைத்து வைத்ததைத்தான் அண்மைக்கால வரலாறு நமக்கு எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு தமிழனும், படிப்பு படித்த பிறகு வடமொழியைக் கலந்து தமிழைச் சிதைக்கும் மூடனாகி விடுகிறான். படிக்காத கிராம மக்களைப் பார்த்தால், தூய தமிழ் பேச்சு பால் பொங்கினாற்போலப் பொங்கும்.
இந்த ஒழுக்கங்கெட்ட மானங்கெட்ட நிலையில் இருந்து தமிழன் முழுமையாக விலகும் நாளே தமிழ் மறுமலர்ச்சி காலமாகும். எழுத்துக்கள் அறிவின் பால் வருகின்றது. அதைக் கலைமகள் என்று சொல்வர். தமிழிலே பிறமொழியைக் கலப்பது கலைமகள் அருகில் பீடையையோ அல்லது மூதேவியையோ அமரச் செய்வதற்கு ஒப்பாகும்.
நன்னீரில் சாக்கடைத்துளிகளை விடுவதற்கு ஒப்பாம் மொழிக்கலப்பிற்குட்பட்ட தமிழ். தமிழர் வேதனைகளின் அடிப்படையே இந்த மொழிக்கலப்பில்தான். தமிழில் எழுதும்போது என்ன ஒவ்வொருவரையும் உடல்வலிக்க வேலை செய்யவாச் சொல்கிறார்கள்? பிறமொழி எழுத்தைச் சேர்க்காதே என்று மட்டும்தான் சொல்கிறார்கள்! ஆங்காங்கே தமிழில் தொற்றிக்கொள்ளும் அழுக்கை நீக்கி விட்டு எழுதுங்கள்; அப்படியே பழகுங்கள்; பிள்ளைகளையும் பழக்குங்கள்; தமிழிலெயே பேசுங்கள்; என்றுதான் சொல்கிறார்கள். ஆக்கிரமிக்கும் படைகளின் நாடுகளின் பொருட்களை அருவெறுப்புடன்பார்த்து அகற்ற நினைக்கும் மனிதகுலத்தின் அதே மாண்புதான் இங்கும் தேவைப்படுகிறது.
மொழியில் பிறமொழி ஆக்கிரமிப்பை அகற்றவேண்டுமாயின் அயன்மொழியை தம் எழுத்தில் பேச்சில் அகற்றத்தானே வேண்டும்? அதைச் செய்யாமல், தமிழ் வாழ்க! கோயிலுக்குள் தமிழில் மணி அடிப்போம் என்று சொன்னால் நம்மைப் பார்த்து நகைக்கத்தானே செய்யும் பகை! அதை உணர வேண்டாமா? அது நமது கடமையல்லவா? மொழிக்கலப்பு விசயத்தில் தமிழ் எழுதுபவர்களை நான்காகப் பிரிக்கலாம். 1)தூய மொழித் தமிழர்கள். 2)அயன்மொழிப் பகைவர்கள். 3) அயன்மொழி கலந்த தமிழ் எழுதும் தமிழர்கள். 4)எது தெரியுமோ அதை எழுதும் அப்பாவித் தமிழர்கள் இரண்டாவது வகையினரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அவர்கள் மாற மாட்டார்கள். அவர்கள் மாற வேண்டிய அவசியமும் இல்லை. மூன்றாவது வகையினரில் பேரறிஞர்கள் வரை உண்டு. இவர்கள் இச்சிக்கலைப்பார்க்கும் கண்ணோட்டம் மிகவும் கோழைத்தனமானது.
மொழி என்றால் புரிய வைப்பதற்குத்தானே என்று நினைப்பது ஒரு புறம்; மற்றொரு புறத்தில் தூய தமிழ் எழுதினால் தீயதமிழன் என்று நினைப்பார்களோ என்று அச்ச மற்றும் கோழை உணர்வு. யாருக்காக அய்யுறுகிறார்கள் என்று தெரியவில்லை. அல்லது நமக்கேன் வம்பு, எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய் இருப்போமே என்ற கோழைத்தனம் அன்றி வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தெருவின் பாராட்டு வேண்டி ஊரையே கெடுப்பவர்கள்தான் இவ்வகையினர் என்றால் அதைமறுக்க யாரால் ஏலும்? நான்காவது வகையினர் பெரும்பான்மையினர். முதல் வகையும் மூன்றாம் வகையும் ஒன்றானால், இந்த நான்காம் வகை சீர் பெறும். தமிழ் வளம் பெறும். தமிழர் நேர்மை பெறுவர். தமிழ் எழுத்துக்களில் பிற மொழி கலந்து எழுதுவது "மொழி ஊழல்" ஆகும். அந்த ஊழலை தமிழர் தவிர்த்து தமிழின் மானத்தையும் தன் மானத்தையும் காக்க வேண்டியபொறுப்பு அனைவர்க்கும் உண்டு. அதுதான் தமிழ்ப்பணியும் கூட!இந்த அடிப்படையை மறந்து செய்யும் எந்தத் தமிழ்ப்பணியும் தன்னொழுக்கம் இல்லாத தமிழ்ப் பிணிதான்என்பதில் அய்யமில்லை.
நன்றி: http://tamil.sify.com/

Monday, August 27, 2007

ஈழத்து இலக்கிய வரலாறு

ஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து தமிழ் ஆக்கங்களின் நீண்ட வரலாற்றை, தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பை, தனித்துவத்தை, ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியை பதிவுசெய்கின்றது.
பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் இலக்கியத்துக்குப்பல பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன.
வடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.
தமிழ்நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை, உலா, கலம்பகம், சதகம், தூது, அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம், கோணாசல புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம் என்பனவும் அங்குப் பிறந்தவைகளே. சூது புராணம், வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது.
கிருஸ்துவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன.
நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்களை போற்றி வருகிறார்கள்.
நன்றி: http://ta.wikipedia.org

Friday, August 24, 2007

பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்களுடன் நேர்காணல்

தமிழின் இரண்டாம் தலைநகரம்

பேராசிரியர் கி.நாச்சிமுத்து

சமீபத்தில் தில்லி நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் கி.நாச்சிமுத்து, கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழின் குறிப்பிடத் தகுந்த மொழியலாளர்களில் ஒருவர். ஜெர்மனியிலும் தமிழகத்தில் க்ரியாவின் தற்காலத் தமிழகராதித் தொகுப்பிலும் பங்கேற்ற பல மொழி இலக்கியங்களிலும் பரிச்சயமுள்ளவர். பேராசிரியர் நாச்சிமுத்துவுடன் ஒரு மனம் திறந்த நேர்காணல்.

நீங்கள் சமீபத்தில் பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகளின் மையம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி...

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்தப் பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது. இந்தியத் தூதராகப் பல நாடுகளில் பணியாற்றிய பார்த்தசாரதி அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர். மானிடவியல் துறையின் பல்வேறு பரிமாணங்கள் - உலக மொழிகள், அரசியல், சட்டம், சமூகவியல், வரலாறு போன்ற துறைகளோடு துவங்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் இது. இங்கு முதலில் அயல்நாட்டு மொழிகளைத் தான் பயிற்றுவித்து வந்தார்கள். பிறகு இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப் பல்கலைக் கழகத்தில் வழக்கமான மற்ற பல்கலைக்கழகங்களைப் போன்ற துறைகள் இல்லை. பள்ளிகள் என்று தோற்றுவித்து நிர்வகித்து வருகிறார்கள். பல்வேறு துறைகளை ஊடுருவி ஒரு பரந்த பார்வையைக் கொண்டுவரக்கூடிய ஒரு அமைப்பாக இந்தப் பள்ளிகள் விளங்குகின்றன. இந்தப் பள்ளிகளுக்குக் கீழே பல்வேறு மையங்கள் செயல்படுகின்றன. இந்தப் பல்வேறு மையங்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பன்முகத்தன்மை கொண்ட செயல்திட்டங்களை செயல்படுத்தும் காரியத்தை செய்து வருகின்றன. இதில் இந்திய மொழிகள் மையம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் இந்தியும் உருதுவும்தான் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.நீண்ட கால முயற்சிக்குப் பிறகு இந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசும் முயற்சிகள் எடுத்தது. தமிழக அரசு கொடுத்த ஐம்பது லட்சம் உதவித் தொகையைக் கொண்டு ஒரு விரிவுரையாளர் பதவியைத் தான் உருவாக்க முடியும் என்று பல்கலைக்கழகம் கருதி இங்குள்ள தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழக அரசு ஆகியோரிடம் ஆலோசனைக் கேட்டு, தமிழை செம்மொழியாக அறிவித்தபோது தமிழுக்காக ஒரு பேராசிரியர் பதவியை ஏற்படுத்தினார்கள். ரோமிலா தாப்பர் போன்ற மிகப்பெரும் மேதைகள் இருந்த இடம் இந்தப் பல்கலைக் கழகம். எனவே, இங்கு தமிழ்ப் பேராசியர் பதவிக்கான அழைப்பு வந்தபோது நான் மகிழ்ச்சியுடன் பணியாற்ற வந்தேன்.

இதற்கு முன்னர் கேரளாவில் நீங்கள் வகித்த பொறுப்புக்கள்...

தமிழ்நாட்டில் கோவையில் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் பிறகு கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலையும் பின்னர் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு, விரிவுரையாளர், இணைப்பேராசிரியர் போன்ற பதவிகளையும் அதே கேரளப் பல்கலைக்கழகத்தில் வகித்தேன். பின்னர் இரண்டாண்டுகள் ஜெர்மனியிலும் போலந்து வார்ஸா பல்கலைக்கழகத்தில் மூன்றரையாண்டுகள் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தேன். எனவே கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் நான் கழித்த கேரளப் பல்கலைக் கழகம்தான் எனக்குத் தாய்வீடாக ஆனது என்று சொல்ல வேண்டும். அங்கு நான் கடந்த பத்தாண்டுகளாக தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினேன்.

நீங்கள் மேற்கொண்ட ஆய்வு எதைப்பற்றி இருந்தது?

முனைவர் பட்டத்துக்கான என்னுடைய ஆய்வு இடப்பெயர்கள் பற்றியது. முதுகலையிலும் நான் கொங்கு நாட்டு ஊர்ப்பெயர்கள் பற்றி ஆய்வு செய்தேன். அதைத் தொடர்ந்து இடப்பெயர் கழகம் என்ற அமைப்பினைத் தோற்றுவித்து நிறைய ஆய்வுக்கட்டுரைகளையும் செய்தி மடல்களையும் வெளியிட்டோம். கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு என்னுடைய ஆய்வுகள் பெரும்பாலும் தொல்லிலக்கணம், தொல் இலக்கியம் போன்றவற்றை நோக்கிச் சென்றது. பெரும்பாலும் மொழி, இலக்கியம் போன்றவற்றில் நான் அதிக ஈடுபாடு வைத்திருக்கிறேன். கல்வெட்டுக்கள், வரலாறு போன்றவற்றிலும் சுவடிகளைப் பதிப்பிப்பது, கல்வெட்டுக்கள் பற்றிய குறிப்புக்களை வெளியிடுவது போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபட்டதுண்டு. அகராதி இயலிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. முதலில் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டிருந்தேன். ""நடை'' போன்ற இதழ்களில் கவிதைகளை வெளியிட்டேன். ""தாமரை இதழ்களிலும்'' ""கணையாழியிலும்'' கதைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய நண்பர் நண்பர் என்று சொல்வதை விட என் வழிகாட்டி என்று சொல்லலாம். அவர் சொன்னார் - ""படைப்பிலக்கியங்களில் அதிகம் ஈடுபட்டால் ஆராய்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்த முடியாது'' என்று. எனவே படைப்பிலக்கியத்தை விட்டு மேற்கூறிய துறைகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டேன்.

தமிழ் தவிர உங்களுக்கு மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஜெர்மன், போலிஷ் போன்ற மொழிகளிலும் பரிச்சயம் உண்டு. இந்த மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொண்டிருக்கிறீர்களா?

மலையாளத்திலிருந்து நிறைய மொழிபெயர்ப்புக்கள் செய்திருக்கிறேன். மலையாளத்தில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். குறிப்பாக மலையாள எழுத்தாளர் சி.ராதாகிருஷ்ணனின் ஸ்பந்தமாதினிகளே நன்னி என்னும் சுமார் 600 பக்கங்கள் கொண்ட நாவலை நில அதிர்வுமானிகளே நன்றி என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். நீலபத்மநாபன், சுகுமாரன் போன்றோர் இந்த மொழிபெயர்ப்பை மிகவும் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள். நாராயணகுருவின் படைப்புக்களை மொழிபெயர்த்து இருக்கிறேன். போலிஷ் மொழியில் இருந்து 1996ல் நோபல் பரிசு பெற்ற விஸ்வாவா சிம்போர்ஸ்கா என்ற பெண் கவிஞரின் கவிதைகளை மொழிபெயர்த்து இருக்கிறேன். அங்கு டாக்டர் ஹெர்மன் என்று ஒரு தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடைய துணையைக் கொண்டு போலிஷ் மொழியில் இருந்து நேரிடையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்டேன். ஓராண்டு ஜெர்மன் படித்தேன். திருவனந்தபுரத்தில் பல ஆண்டுகள் வசித்து இருக்கிறீர்கள்.

அங்கு மேற்கொள்ளப்படும் தமிழ்க் கலை, இலக்கிய செயல்பாடுகள் குறித்துக் கொஞ்சம் சொல்லமுடியுமா?

திருவனந்தபுரத்தை இரண்டாவது தமிழ்த் தலைநகரம் என்று சொல்லலாம். அது தமிழகத்துடன் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள இடம். அங்கு 45 சதவிகிதத்துக்கும் மேல் தமிழர்கள் தான் வசிக்கிறார்கள். திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்தது. ஒருவகையில் சொல்லப்போனால் அது தமிழர்களுக்குச் சொந்தமான இடம். சுந்தரம்பிள்ளை, அவருக்கு முன்னமே வரகவி ராமன் பிள்ளை (திருக்குறுங்குடி நம்பி பேரில் சதகம்) இருந்திருக்கிறார். சுந்தரம்பிள்ளை மகாராஜாவின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கியவர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்தார். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கென்றே தோற்று விக்கப்பட்ட சபை அது. வையாபுரிப்பிள்ளை, இசைச்செல்வர் லட்சுமண பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் அங்கு இருந்திருக்கிறார்கள். பாரதியார் கூட ஒருமுறை இந்த சைவப்பிரகாச சபைக்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு வெறும் சர்பத் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டார்கள். அடுத்த நாள் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாமா என்று வையாபுரிப்பிள்ளை கேட்கிறார். ஆனால் மற்றவர்களோ, அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர் என்றும் இவரை அழைத்துக் கூட்டம் போட்டால் அரசின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள் என்று வையாபுரிப்பிள்ளை ஓரிடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார். பாரதி தன்னுடைய ஊழிக்கூத்தை அங்கு பாடிக் காட்டினார் . இங்கிருந்து தமிழன் என்றொரு இதழ் வெளிவந்தது. தொடர்ச்சியாகப் பல தமிழ் நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். நாராயணகுரு, சட்டம்பி சுவாமிகள் போன்றோருக்குக் குருவாக தைக்காடு அய்யாவு சுவாமிகள் என்றொரு தமிழர் இருந்திருக்கிறார். அவர் மிகப்பெரிய ஞானி. தீர்க்கதரிசி. மறைமலை அடிகள், சுவாமிநாத தீட்சிதர் போன்றவர்கள் எல்லாம் அங்கிருந்து தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ரட்சணிய யாத்ரீகம் எழுதிய ஹெச்.ஏ.கிருஷ்ணபிள்ளை. - இவரைக் கிறிஸ்துவர்களின் கம்பர் என்று சொல்வார்கள். அவரும் இருந்திருக்கிறார். ஆதிகாலத்திலிருந்தே திருவனந்தபுரத்தில் அதிகமாகத் தமிழ் நாடகங்கள் தான் நடைபெற்றுக்கொண்டிருந்தனவாம். பார்ஸி நாடகங்கள் எல்லாம் தமிழில் நிகழ்த்தப்பட்டன. பிறகு அதைப் பார்த்துத்தான் அங்கே மலையாள நாடகங்களை அரங்கேற்றத் துவங்கினார்களாம். நீலக்குயில் என்னும் மலையாளத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்த மெரிலாண்ட் பி.சுப்பிரமணியன் ஒரு தமிழர்தான். அவருடைய மகன் திரு.சந்திரன்தான் தற்போது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் புரவலர்களில் ஒருவர். நீலகண்ட சிவன் அங்கு இருந்திருக்கிறார். பாபநாசம் சிவனின் இளம் வயது திருவனந்தபுரத்தில்தான் கழிந்தது. திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி போன்ற இடங்களில் இருந்து நிறைய சமஸ்கிருத பண்டிதர்கள் இங்கு வந்து அரசரின் ஆதரவைப் பெற்று வாழ்ந்திருக்கின்றனர். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பாஸன் நாடகங்கள் போன்றவற்றையெல்லாம் பதிப்பித்த கணபதி சாஸ்திரி, சாம்பசிவ சாஸ்திரி போன்றோரெல்லாம் இங்குதான் இருந்திருக்கிறார்கள். இப்படி தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நிறைய தமிழர்கள் இங்கே தொண்டு புரிந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மாமனார் வீடு திருவனந்தபுரம்தான். நகுலன் இருக்கிறார். ஆ.மாதவன், நீலபத்மநாபன், ஹெப்ஸிபா ஜேசுதாசன் இருக்கிறார்கள். அமரர் சண்முகசுப்பையா, அமரர் ஜேசுதாசன் ஆகியோர் இங்குதான் இருந்தார்கள். இப்படி நவீனத் தமிழ் இலக்கியத்துக்கும் திருவனந்தபுரத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரியின் தமிழ்த்துறை 150 ஆண்டுகள் பழமையானது. வள்ளல் அழகப்ப செட்டியாரின் ஒரு லட்சத்து ஒரு ரூபாய் நன்கொடையில் உருவான கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அறுபது ஆண்டுகள் பழமையானது. இந்தத் துறையில் மு.ராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, வி.ஐ.சுப்பிரமணியம் ச.வே.சுப்பிரமணியன், மா.இளையபெருமாள் போன்ற மேன்மையான தமிழறிஞர்கள் இங்கு பணிபுரிந்திருக்கிறார்கள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் இரண்டு துணைவேந்தர்களும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும் இங்கிருந்து சென்றவர்கள்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.

பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்களுடன் நேர்காணல்

தமிழின் இரண்டாம் தலைநகரம்

பேராசிரியர் கி.நாச்சிமுத்து

சமீபத்தில் தில்லி நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் கி.நாச்சிமுத்து, கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழின் குறிப்பிடத் தகுந்த மொழியலாளர்களில் ஒருவர். ஜெர்மனியிலும் தமிழகத்தில் க்ரியாவின் தற்காலத் தமிழகராதித் தொகுப்பிலும் பங்கேற்ற பல மொழி இலக்கியங்களிலும் பரிச்சயமுள்ளவர். பேராசிரியர் நாச்சிமுத்துவுடன் ஒரு மனம் திறந்த நேர்காணல்.

நீங்கள் சமீபத்தில் பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகளின் மையம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி...

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்தப் பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது. இந்தியத் தூதராகப் பல நாடுகளில் பணியாற்றிய பார்த்தசாரதி அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர். மானிடவியல் துறையின் பல்வேறு பரிமாணங்கள் - உலக மொழிகள், அரசியல், சட்டம், சமூகவியல், வரலாறு போன்ற துறைகளோடு துவங்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் இது. இங்கு முதலில் அயல்நாட்டு மொழிகளைத் தான் பயிற்றுவித்து வந்தார்கள். பிறகு இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப் பல்கலைக் கழகத்தில் வழக்கமான மற்ற பல்கலைக்கழகங்களைப் போன்ற துறைகள் இல்லை. பள்ளிகள் என்று தோற்றுவித்து நிர்வகித்து வருகிறார்கள். பல்வேறு துறைகளை ஊடுருவி ஒரு பரந்த பார்வையைக் கொண்டுவரக்கூடிய ஒரு அமைப்பாக இந்தப் பள்ளிகள் விளங்குகின்றன. இந்தப் பள்ளிகளுக்குக் கீழே பல்வேறு மையங்கள் செயல்படுகின்றன. இந்தப் பல்வேறு மையங்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பன்முகத்தன்மை கொண்ட செயல்திட்டங்களை செயல்படுத்தும் காரியத்தை செய்து வருகின்றன. இதில் இந்திய மொழிகள் மையம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் இந்தியும் உருதுவும்தான் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.நீண்ட கால முயற்சிக்குப் பிறகு இந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசும் முயற்சிகள் எடுத்தது. தமிழக அரசு கொடுத்த ஐம்பது லட்சம் உதவித் தொகையைக் கொண்டு ஒரு விரிவுரையாளர் பதவியைத் தான் உருவாக்க முடியும் என்று பல்கலைக்கழகம் கருதி இங்குள்ள தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழக அரசு ஆகியோரிடம் ஆலோசனைக் கேட்டு, தமிழை செம்மொழியாக அறிவித்தபோது தமிழுக்காக ஒரு பேராசிரியர் பதவியை ஏற்படுத்தினார்கள். ரோமிலா தாப்பர் போன்ற மிகப்பெரும் மேதைகள் இருந்த இடம் இந்தப் பல்கலைக் கழகம். எனவே, இங்கு தமிழ்ப் பேராசியர் பதவிக்கான அழைப்பு வந்தபோது நான் மகிழ்ச்சியுடன் பணியாற்ற வந்தேன்.

இதற்கு முன்னர் கேரளாவில் நீங்கள் வகித்த பொறுப்புக்கள்...

தமிழ்நாட்டில் கோவையில் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் பிறகு கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலையும் பின்னர் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு, விரிவுரையாளர், இணைப்பேராசிரியர் போன்ற பதவிகளையும் அதே கேரளப் பல்கலைக்கழகத்தில் வகித்தேன். பின்னர் இரண்டாண்டுகள் ஜெர்மனியிலும் போலந்து வார்ஸா பல்கலைக்கழகத்தில் மூன்றரையாண்டுகள் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தேன். எனவே கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் நான் கழித்த கேரளப் பல்கலைக் கழகம்தான் எனக்குத் தாய்வீடாக ஆனது என்று சொல்ல வேண்டும். அங்கு நான் கடந்த பத்தாண்டுகளாக தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினேன்.

நீங்கள் மேற்கொண்ட ஆய்வு எதைப்பற்றி இருந்தது?

முனைவர் பட்டத்துக்கான என்னுடைய ஆய்வு இடப்பெயர்கள் பற்றியது. முதுகலையிலும் நான் கொங்கு நாட்டு ஊர்ப்பெயர்கள் பற்றி ஆய்வு செய்தேன். அதைத் தொடர்ந்து இடப்பெயர் கழகம் என்ற அமைப்பினைத் தோற்றுவித்து நிறைய ஆய்வுக்கட்டுரைகளையும் செய்தி மடல்களையும் வெளியிட்டோ ம். கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு என்னுடைய ஆய்வுகள் பெரும்பாலும் தொல்லிலக்கணம், தொல் இலக்கியம் போன்றவற்றை நோக்கிச் சென்றது. பெரும்பாலும் மொழி, இலக்கியம் போன்றவற்றில் நான் அதிக ஈடுபாடு வைத்திருக்கிறேன். கல்வெட்டுக்கள், வரலாறு போன்றவற்றிலும் சுவடிகளைப் பதிப்பிப்பது, கல்வெட்டுக்கள் பற்றிய குறிப்புக்களை வெளியிடுவது போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபட்டதுண்டு. அகராதி இயலிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. முதலில் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டிருந்தேன். ""நடை'' போன்ற இதழ்களில் கவிதைகளை வெளியிட்டேன். ""தாமரை இதழ்களிலும்'' ""கணையாழியிலும்'' கதைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய நண்பர் நண்பர் என்று சொல்வதை விட என் வழிகாட்டி என்று சொல்லலாம். அவர் சொன்னார் - ""படைப்பிலக்கியங்களில் அதிகம் ஈடுபட்டால் ஆராய்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்த முடியாது'' என்று. எனவே படைப்பிலக்கியத்தை விட்டு மேற்கூறிய துறைகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டேன்.

தமிழ் தவிர உங்களுக்கு மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஜெர்மன், போலிஷ் போன்ற மொழிகளிலும் பரிச்சயம் உண்டு. இந்த மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொண்டிருக்கிறீர்களா?

மலையாளத்திலிருந்து நிறைய மொழிபெயர்ப்புக்கள் செய்திருக்கிறேன். மலையாளத்தில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். குறிப்பாக மலையாள எழுத்தாளர் சி.ராதாகிருஷ்ணனின் ஸ்பந்தமாதினிகளே நன்னி என்னும் சுமார் 600 பக்கங்கள் கொண்ட நாவலை நில அதிர்வுமானிகளே நன்றி என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். நீலபத்மநாபன், சுகுமாரன் போன்றோர் இந்த மொழிபெயர்ப்பை மிகவும் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள். நாராயணகுருவின் படைப்புக்களை மொழிபெயர்த்து இருக்கிறேன். போலிஷ் மொழியில் இருந்து 1996ல் நோபல் பரிசு பெற்ற விஸ்வாவா சிம்போர்ஸ்கா என்ற பெண் கவிஞரின் கவிதைகளை மொழிபெயர்த்து இருக்கிறேன். அங்கு டாக்டர் ஹெர்மன் என்று ஒரு தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடைய துணையைக் கொண்டு போலிஷ் மொழியில் இருந்து நேரிடையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்டேன். ஓராண்டு ஜெர்மன் படித்தேன். திருவனந்தபுரத்தில் பல ஆண்டுகள் வசித்து இருக்கிறீர்கள்.

அங்கு மேற்கொள்ளப்படும் தமிழ்க் கலை, இலக்கிய செயல்பாடுகள் குறித்துக் கொஞ்சம் சொல்லமுடியுமா?

திருவனந்தபுரத்தை இரண்டாவது தமிழ்த் தலைநகரம் என்று சொல்லலாம். அது தமிழகத்துடன் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள இடம். அங்கு 45 சதவிகிதத்துக்கும் மேல் தமிழர்கள் தான் வசிக்கிறார்கள். திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்தது. ஒருவகையில் சொல்லப்போனால் அது தமிழர்களுக்குச் சொந்தமான இடம். சுந்தரம்பிள்ளை, அவருக்கு முன்னமே வரகவி ராமன் பிள்ளை (திருக்குறுங்குடி நம்பி பேரில் சதகம்) இருந்திருக்கிறார். சுந்தரம்பிள்ளை மகாராஜாவின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கியவர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்தார். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கென்றே தோற்று விக்கப்பட்ட சபை அது. வையாபுரிப்பிள்ளை, இசைச்செல்வர் லட்சுமண பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் அங்கு இருந்திருக்கிறார்கள். பாரதியார் கூட ஒருமுறை இந்த சைவப்பிரகாச சபைக்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு வெறும் சர்பத் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டார்கள். அடுத்த நாள் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாமா என்று வையாபுரிப்பிள்ளை கேட்கிறார். ஆனால் மற்றவர்களோ, அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர் என்றும் இவரை அழைத்துக் கூட்டம் போட்டால் அரசின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள் என்று வையாபுரிப்பிள்ளை ஓரிடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார். பாரதி தன்னுடைய ஊழிக்கூத்தை அங்கு பாடிக் காட்டினார் . இங்கிருந்து தமிழன் என்றொரு இதழ் வெளிவந்தது. தொடர்ச்சியாகப் பல தமிழ் நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். நாராயணகுரு, சட்டம்பி சுவாமிகள் போன்றோருக்குக் குருவாக தைக்காடு அய்யாவு சுவாமிகள் என்றொரு தமிழர் இருந்திருக்கிறார். அவர் மிகப்பெரிய ஞானி. தீர்க்கதரிசி. மறைமலை அடிகள், சுவாமிநாத தீட்சிதர் போன்றவர்கள் எல்லாம் அங்கிருந்து தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ரட்சணிய யாத்ரீகம் எழுதிய ஹெச்.ஏ.கிருஷ்ணபிள்ளை. - இவரைக் கிறிஸ்துவர்களின் கம்பர் என்று சொல்வார்கள். அவரும் இருந்திருக்கிறார். ஆதிகாலத்திலிருந்தே திருவனந்தபுரத்தில் அதிகமாகத் தமிழ் நாடகங்கள் தான் நடைபெற்றுக்கொண்டிருந்தனவாம். பார்ஸி நாடகங்கள் எல்லாம் தமிழில் நிகழ்த்தப்பட்டன. பிறகு அதைப் பார்த்துத்தான் அங்கே மலையாள நாடகங்களை அரங்கேற்றத் துவங்கினார்களாம். நீலக்குயில் என்னும் மலையாளத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்த மெரிலாண்ட் பி.சுப்பிரமணியன் ஒரு தமிழர்தான். அவருடைய மகன் திரு.சந்திரன்தான் தற்போது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் புரவலர்களில் ஒருவர். நீலகண்ட சிவன் அங்கு இருந்திருக்கிறார். பாபநாசம் சிவனின் இளம் வயது திருவனந்தபுரத்தில்தான் கழிந்தது. திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி போன்ற இடங்களில் இருந்து நிறைய சமஸ்கிருத பண்டிதர்கள் இங்கு வந்து அரசரின் ஆதரவைப் பெற்று வாழ்ந்திருக்கின்றனர். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பாஸன் நாடகங்கள் போன்றவற்றையெல்லாம் பதிப்பித்த கணபதி சாஸ்திரி, சாம்பசிவ சாஸ்திரி போன்றோரெல்லாம் இங்குதான் இருந்திருக்கிறார்கள். இப்படி தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நிறைய தமிழர்கள் இங்கே தொண்டு புரிந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மாமனார் வீடு திருவனந்தபுரம்தான். நகுலன் இருக்கிறார். ஆ.மாதவன், நீலபத்மநாபன், ஹெப்ஸிபா ஜேசுதாசன் இருக்கிறார்கள். அமரர் சண்முகசுப்பையா, அமரர் ஜேசுதாசன் ஆகியோர் இங்குதான் இருந்தார்கள். இப்படி நவீனத் தமிழ் இலக்கியத்துக்கும் திருவனந்தபுரத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரியின் தமிழ்த்துறை 150 ஆண்டுகள் பழமையானது. வள்ளல் அழகப்ப செட்டியாரின் ஒரு லட்சத்து ஒரு ரூபாய் நன்கொடையில் உருவான கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அறுபது ஆண்டுகள் பழமையானது. இந்தத் துறையில் மு.ராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, வி.ஐ.சுப்பிரமணியம் ச.வே.சுப்பிரமணியன், மா.இளையபெருமாள் போன்ற மேன்மையான தமிழறிஞர்கள் இங்கு பணிபுரிந்திருக்கிறார்கள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் இரண்டு துணைவேந்தர்களும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும் இங்கிருந்து சென்றவர்கள்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.

நன்றி: http://tamil.sify.com/vadakkuvaasal/fullstory.php?id=14453636&page=1

தமிழின் இரண்டாம் தலைநகரம் - பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களின் உரை

மேலும் விபரங்களுக்கு.....
http://tamil.sify.com/vadakkuvaasal/fullstory.php?id=14453636&page=3

Thursday, August 23, 2007

கவிதை

உலக சுகாதார தினம்

ப. குமார்

நேற்று ஈழம்
இன்று ஈராக்
குவியல் குவியலாய்ப் பிணங்கள்
மறுபக்கம் மருத்துவமனையில்
உறைந்த குருதிகளுடன்
கை கால் இழந்த குழந்தைகள்
இவை போலியோவால் அல்ல!
போரினால்.

சுதந்திரம்
என் பேச்சிற்கும் இல்லை
என் மூச்சிற்கும் இல்லை-இன்று
சல்லடை போட்டுச் சுவாசிக்கிறேன்
சார்ஸ் நோயாம்.

குப்பைத் தொட்டியில் வீசிய
உணவுப் பொட்டலத்திற்க்கு
உருண்டு புரண்டான் ஒருவன் நாயோடு!-அந்த
உணவை உண்ணும் போது நினைத்தான்-இன்று
உலக சுகாதார தினமென்று.

குண்டுகளின்
சத்தங்கள்
எங்கள் காதுகளைச் செவிடாக்கின.
புகைகள்
எங்கள் சுவாசத்தை வீணடித்தன.
அதன் சிதறல்கள்
எங்கள் கண்களைக் குருடாக்கின.
இவைகளின் ஒட்டுமொத்த
அவலங்களுக்குப் பதில்தான் என்ன?

ஓ! இன்று உலக சுகாதார தினமல்லவா?

நேற்று ஈழம்
இன்று ஈராக்
நாளை ?

ப. குமார், ஆய்வாளர், தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
kumsu_in@yahoo.com

திண்ணையில் ப. குமார் (Friday August 22, 2003)

Friday, August 10, 2007

கவிதைக் கிறுக்கல்

ம(றை)றந்த நிஜங்கள்

முகவை ப.குமார்

புதிய மண்பானையில்
மாக்கோலமிட்டு
வீட்டின் முற்றத்தில்
புதிய அரிசிகொண்டு
பொங்கலிட்ட -அந்நாள்...

உப்புக்கரிக்கும்
உடல் வியர்வைகள்பட்டு
விளைந்த நெல்கொண்டு செய்த
பொங்கல் இனிப்பாக இருந்தது
சர்க்கரையினால் அல்ல...

கட்டாந்தரையில்
படுத்திருந்த எருதின்
கயிற்றைப்பிடித்து
தலைக்கு மேலிருக்கும்
தண்ணீர் நிறைந்த
ஆழத்தில் ஆற்றுக்கு
ஓட்டிச் சென்று
நீச்சல் கற்ற -அந்நாள்...

எருதுக் கொம்புகளை
ஊசி முனைகளாக்கி
கழுத்தில் பணத்தையும்
கொம்பில் துண்டையும் கட்டிவிட்டு
மீசையிருந்தா புடிங்கடா என
முழக்கமிட்ட -அந்நாள்...

தாத்தா பாட்டியையும்
தனக்கு முதியோரையும்
வணங்கிவிட்டு வரும்போது
அவர்கள் கொடுக்கும்
கால்ரூபாய் அரைரூபாய்
இவற்றை
நான் மறந்து விட்டேனா?
மறைத்து விட்டேனா?...

பண்பாட்டின் வளர்விடம்
போற்றிப் பாட
நாகரீகத்தின் வளர்விடம்
மறைத்தும் மறந்தும் விடுகின்றன
கூடவே நானும்.

(திண்ணை இணையதளத்தில் 2004 சனவரி 24-ல் வெளிவந்த என் கவிதைக் கிறுக்கல்)

வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

தொகுப்பு
ந.வெற்றியழகன்
http://www.keetru.com/info_box/general/tamil.php

சாந்தம் - அடக்கம்
சாந்தி - அமைதி
சாரம் - சாறு; பிழிவு
சாராம்சம் - சாறு; பிழிவு
சாத்தியமான - இயலக்கூடிய
சாம்ராச்சியம் - பேரரசு
சிகரம் - உச்சி; முகடு
சிகை - தலைமயிர்
சிரம் - தலை
சிரசு - தலை
சிங்கம் - அரிமா
சிங்காரம் - ஒப்பனை; அழகு
சிசு - குழந்தை; சேய்
சித்தப்பிரமை - மனமயக்கம்
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கோட்பாடு
சிந்தனை - எண்ணம்
சிரமம் - கடுமை
சிலை - படிமம்
சிநேகம் - நட்பு
சிருங்காரம் - காமம்
சிதிலம் - சிதைவு
சீக்கிரமாக - சுருக்காக
சீதபேதி - வயிற்றுக்கடுப்பு
சீலம் - நல்லொழுக்கம்
சீ(ஜீ)ரணம் - செரிமானம்
சீ(ஜீ)வன் - உயிர்
சீ(ஜீ)வனம் - பிழைப்பு
சுகம் - நலம்
சுலபம் - எளிது
சுகவீனம் - நலக்குறைவு
சுகாதாரம் - நலவாழ்வு
சுத்தம் - தூய்மை
சுத்திகரிப்பு - துப்புரவு
சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை
சுந்தரம் - எழில்
சுபம் - நன்மை
சுபீட்சம் - செழிப்பு
சுபாவம் - இயல்பு
சுய(நலம்) - தன்(னலம்)
சுயமாக - தானாக, சொந்தமாக
சுவாசம் - மூச்சு
சுரணை - உணர்ச்சி
சுயாதீனம் - தன்னுரிமை
சு(ஜு)வாலை - தீக்கொழுந்து
சுயேச்சை - தன்விருப்பம்
சூட்சுமம் - நுட்பம்
சூசகம் - மறைமுகம்
சூத்திரம் - நூற்பா
சூன்யம் - வெறுமை; பாழ்; இன்மை
சேட்டை - குறும்பு
சொகுசு - பகட்டு
சொப்பனம் - கனவு
சொற்பம் - சிறுமை; கொஞ்சம்
சோகம் - துயரம்
சோதனை - ஆய்வு
சோரம் - கள்ளம்
சவுக்யம் - நலம்
சவுபாக்யம் - நற்பேறு
ஞாபகம் - நினைவு
ஞானம் - அறிவு
தண்டனை - ஒறுத்தல்
தத்துவம் - மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்
தயவு (தயை) - இரக்கம்
தயாளம் - இரக்கம்
தந்தி - தொலைவரி
தயிலம் - எண்ணெய்
தரிசு - வறள்நிலம்; விடுநிலம்
தருணம் - வேளை
தனம் - செல்வம்
தரித்திரம் - வறுமை
தயாரிப்பு - விளைவாக்கம்
தகனம் - எரியூட்டல்
தய்ரியம் - துணிச்சல்
தானம் - கொடை
தாகம் - நீர்வேட்கை
தாசன் - அடியான்
தாட்சண்யம் - கண்ணோட்டம்; இரக்கம்
தாமதம் - காலநீட்சி; காலத்தாழ்ச்சி; நெடுநீர்
திடம் - திண்மை
திடகாத்திரம் - உடலுறுதி; உடற்கட்டு; கட்டுடல்
தியாகம் - ஈகம்
திரவம் - நீர்மம்
திரவியம் - செல்வம்
திராணி - தெம்பு; வலிமை

Tuesday, August 7, 2007

தி. வே. கோபாலையர்

தி. வே. கோபாலையர்

தி. வே. கோபாலையர் (இ. ஏப்ரல் 1, 2007) பதிப்பாசிரியராக, உரையாசிரியராக, சொற்பொழிவாளராக, பேராசிரியராக மிளிர்ந்த தமிழறிஞர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர்.
திருவையாறு கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, புதுவை பிரெஞ்சு நிறுவனம் முதலானவற்றில் பணிபுரிந்தவர். தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர். இராமாயணத்திலும், சீவக சிந்தாமணியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
தி. வே. கோபாலையர் அவர்கள் ஏப்ரல் 1, 2007 அன்று மாலை ஐந்து மணிக்கு தமது மகளாரின் இல்லத்தில் (திருச்சி, திருவரங்கம்) தம் 8 2 ஆம்வயதில் இயற்கை எய்தினார்.

பண்டிதர் அயோத்திதாசர்

பண்டிதர் அயோத்திதாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அயோத்திதாசர் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வாழ்ந்த ஒரு தமிழறிஞர் மற்றும் திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு

அயோத்திதாசர் மே மாதம் இருபதாம் திகதி 1845- ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் காத்தவராயன்.

கல்வியும், புலமையும்

அயோத்திதாசர் தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார்.

Monday, August 6, 2007

மின் நூலகம்

கணினிமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் நூல்கள் அச்சிடப்பட்ட காலம்மாறி ஒலி வடிவில்கூட மாறிக்கொண்டு வருகிறது. இத்தகைய நிலையில், ஏற்கனவே அச்சிடப்பட்ட நூல்கள் அனைத்தும் மின் மயமாக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதும் போற்றவேண்டியதுமாகும். இதைப் பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள் செய்ய முன்வராதது வேதனையாக இருந்தாலும், தனியார் நிறுவனங்கள் செய்துகொண்டிருப்பது ஆறுதலான ஒன்றாகும்.....

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்குச் செல்லவும்.......

ஜி. யு. போப்

ஜி. யு. போப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 12, 1908) அமெரிக்காவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்
வட அமெரிக்காவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் நோவா ஸ்கோஷியா என்னுமிடத்தில் ஜோன் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

[தொகு] தமிழ்நாட்டிற்கு வருகை
விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.
தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
இவர் தன் கல்லறையில் "ஓர் தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுதும்படி வேண்டிக்கொண்டார்.