தி. வே. கோபாலையர்
தி. வே. கோபாலையர் (இ. ஏப்ரல் 1, 2007) பதிப்பாசிரியராக, உரையாசிரியராக, சொற்பொழிவாளராக, பேராசிரியராக மிளிர்ந்த தமிழறிஞர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர்.
திருவையாறு கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, புதுவை பிரெஞ்சு நிறுவனம் முதலானவற்றில் பணிபுரிந்தவர். தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர். இராமாயணத்திலும், சீவக சிந்தாமணியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
தி. வே. கோபாலையர் அவர்கள் ஏப்ரல் 1, 2007 அன்று மாலை ஐந்து மணிக்கு தமது மகளாரின் இல்லத்தில் (திருச்சி, திருவரங்கம்) தம் 8 2 ஆம்வயதில் இயற்கை எய்தினார்.
No comments:
Post a Comment